அகரம் பற்றி எழுவோம்
அகரம் பற்றி எழுவோம்
அம்மா சொல்லித்தர நாம் பேசும் /
அம்மொழியே தாய்மொழி எம்மொழி தமிழ்மொழி/
பொதிகையில் தோன்றிய முதன்மை மொழியாம் /
பாரினில் தோன்றிய மொழிகள் ஆயிரம்/
அதில் காணாமல் போனது ஏராளம்/
அகத்தியர் இலக்கணத்தால் வளர்த்த மொழி /
சங்கம் வளர்த்தத் தாய்மொழித் தமிழ் /
சங்கமித்து தரணி எங்கும் வளரட்டும்/
பொங்கு தமிழ் கற்று அகரம் /
பற்றி எழுவோம் சிகரம் தொடுவோம் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்