முட்டாளே

முட்டாளே ,
கருப்பு என்பதை
கருப்பு என்றும்,
வெளுப்பு என்பதை
வெளுப்பு என்றும்
விவரணம் பேசியதைத் தவிர
வேறென்ன செய்தோம் ?
எதிர் வருவோரை
எள்ளி நகையாடினோமா?இருப்போரை எடுத்தெறிந்தோமா?

எஞ்சியாரை எரிதழல் கொண்டு
இழித்து இணைத்தோமா?
முரட்டு வாதத்திற்கும் ,
முண்டமான கருத்திற்கும்
தலைசாய்த்து
சென்றாயோ...
முட்டாள்களின் உலகத்திற்கு
முழுக்கவசம் கொண்டு
ஒப்பம் இட்டாயோ
ஒத்துக்கொண்டு
முட்டாளே............

எழுதியவர் : aharathi (24-Jun-15, 12:14 pm)
பார்வை : 125

மேலே