குழந்தை குடும்பம்

வீட்டுச்சாவி வாங்க மேல் வீட்டிற்கு படிகளை ஏறிக்கொண்டிருந்தேன்.

வீட்டுக்குள் இருந்து பலமாக விழுந்தது கொட்டித்தீர்க்கும் திட்டுச் சத்தம்.
கதவை நெருங்கையில் நெஞ்சைப்பிழிந்தது
தொண்டை கனத்த குழந்தையின் மூச்சுச் சத்தம்.

திறந்த மனையின் நுழைவிலே விரித்துக்கிடந்தன புத்தகங்களும் ,
புத்தகப் பையும் ,சில வண்ணத்தீட்டிகளும் , வரைகோலும், அழிப்பானும்.
அருகில் அச்சிறுமி .

அழுதுகொண்டு எழுதிக்கொண்டிருந்தவள் என்னை உள்ளே நடக்க வழி விட
பரப்பிக்கிடந்த புத்தகங்களை எடுக்க எட்டினாள்.
அவளுக்கு உதவ அவசரமாக குனிந்து ஒரு நோட்டுப்புத்தகத்தை எடுத்தேன்.

திட்டிக்கொண்டே சமைத்துக்கொண்டிருந்த அவள் அம்மா
சமையலறை தாண்டி வந்ததும் அவர் கால்கள் கண்களில்பட
பட்டென்று எழுந்தேன் .

வந்தவள் சொன்னால் ,

இவளை கஷ்டப்பட்டு அலைந்து அனுமதி வாங்கி பள்ளியில் சேர்த்தால்
படித்து தொலைய மாட்டிக்கிறாள். அவளது ஆசிரியர் நாளை அவள் அப்பாவை
வந்து பார்க்க சொல்லிருக்கிறார்.

இரவு பகல் பாராமல் வண்டியோட்டி பாடுபடும் மனிதர்
வந்தால் என்ன சொல்வேன். என்று .

கேட்டுக்கொண்டிருந்த நான் வினையாய் கையில் இருந்த நோட்டுப்புத்தகத்தை
புரட்டியபோது கண்ணில் விழுந்தது அந்த வரிகள் .

அச்சிறுமி என்றோ தவறாக எழுதியதிற்கு தண்டனையாக ஐந்து முறை அதையே
திருப்ப எழுதும்மாறு ஆங்கிலத்தில் எழுதியிருந்தார் ஆசிரியை.

அதை அறியா அச்சிறுமி அதையே அழகாய் வரைந்திருந்தால் அடுத்த வரிகளில் .

அதிர்ந்துபோன என்னை அழைத்து சாவியை கொடுத்தாள் அவள் அம்மா .

அச்சிறுமியை கலங்கிய கண்களுடன் பார்த்துவிட்டு வாய் அடைத்து திருப்பினேன்.

இறங்கும் படிகளில் இறுகியது உள்ளம் . அன்றே அவள் அப்பாவிடம் விளக்கச்சொன்னேன்.


இதுபோல் இன்னும்
எத்துணை குழந்தைகளோ !! எத்துணை குடும்பங்களோ !!

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (25-Jun-15, 8:40 pm)
Tanglish : kuzhanthai paaram
பார்வை : 479

மேலே