காரணங்கள் தேவை இல்லை

"இனி ஆண்டுகளின் தொடக்கம்
ஜனவரிக்கே சென்றுவிடும்"
-இப்படிக்கு ஜூலை ;'(
ஜூலை மாதத்தின்
வருத்தங்கள் மேல்தான்
கல்லூரி கடைசியாண்டும்
கால் வைக்க வேண்டியுள்ளது.
பிரிவுகளின் துயர் தாண்டி,
பிணைப்புகளின் பிரியங்களை,
நான்காண்டு இறுதியினில்
கண்வழியே பிரசவிக்கும்
இயற்கைக்கு முரணான
'கல்லூரிப் பிரசவங்கள்'
அதன் சாபமோ ? என்னவோ ?
தெரியாது !
வாழ்க்கையின் CLIMAX ஐ
இப்பொழுதே கண்டுவிட,
மூளைவீட்டை மொத்தமுமாய்
வாழ்க்கை பயங்களுக்கே
வாடகைக்கு விட்டு,
இதயத்திற்கு கொஞ்சநாள்
இடைவேளையும் தரும்
குற்றமில்லாத குழந்தைகள் நாம்;
குலுமனாலியில் குடியிருப்பு முதல்
குடும்பத்தை கூடிநிறுத்தும்
குணம்பொதிந்த காரணங்கள் எவையும் ,
செய்வது சரியா?தவறா?
என்று வாதங்களிடம்
விடை கேட்பதில்லை;
கேட்கவும் தேவையில்லை!
எனினும் நண்பனே!
வாழ்கையின் JIGSAW PUZZLEஐ
நிறைவு செய்யும் துண்டுகள் சில
கல்லூரி காலமெனும்
கனவுகளால் ஆனவை;
GATE இல் தடம் பதித்தாலும்,
GAZETTE இல் இடம் பிடித்தாலும்,
தவற விடும் துண்டுகளுக்கு
காலம் பொறுப்பேர்ப்பதில்லை

எழுதியவர் : (26-Jun-15, 1:26 pm)
பார்வை : 55

மேலே