அண்டத்துகள்

நீர் குடிக்கும் நெருப்பின் தாகம்
தீ அழைக்கும் உறைபனி தேகம்
வான் வளர்த்த திரவதண் யாகம்
மண் சுமக்கும் அத்துனை ரோகம்
யாருணர்ந்து சொல்வது கூடும்
பார் கடக்கும் பயணங்கள் தோறும்
ஏன் எதற்கு என்றறிவோரும்

காலம் நின்று கொடியசைதருணம்
சாரம் யாவும் சாயம் போகும்
பாரம் கொண்ட தானெனும் சிரங்கள்
ஆழிமணலின் துகளாய் சிதறும்
பச்சைவண்ண காற்றும் வீசும்
மிச்சமுற்ற விதைகள் பேசும்
துச்சமில்லை தரணியில் மனிதம்
இதயம் கொண்ட இறையின் கணிதம்

ஏதுமில்லை என்றெனும் போதும்
ஏகமாக வளர்ந்திடும் ஞானம்
தீதும் நன்றும் வினைபலன் சேரும்
யாதுமாகும் ஓர்நிலை காணும்
வாஞ்சையோடு உழுதிட வேண்டும்
வேர்கள் வையம் படர்ந்திட மீண்டும்
உள்ளொளிரும் சுடரில் புலரும்
நம் இனிய இன்னொரு பயணம்.

எழுதியவர் : மதுமதி . H (26-Jun-15, 11:54 pm)
பார்வை : 64

மேலே