இசையென மலர்ந்து
முகிலென முகிலென மனதில் நுழைந்தாள்
மழையென மழையென பொழிந்திடுவாளோ
முகநக தோழமை திரைகளைத் தாண்டி
அகநக காதலை மொழிந்திடுவானோ
இரு விழி ஒரு பொருள் இதயங்கள் தேடும்
கருநிற இருளிலும் கடிதங்கள் போடும்
வரைகிற காவியம் நிறவொளி சூடும்
நிறைகிற நெஞ்சினில் கரவொலி கூடும்
சில நொடிப் பார்வைகள் சிறகடித்தாடும்
மலர்க்கொடி பாலையில் படர்ந்திடக் கூடும்
நிலவொளி தாங்கிய நினைவுகள் யாவும்
பலமொழி தோன்றிய நேசத்தின் யாகம்
நமக்கிது உயிரினில் புலர்கிற கவிதை
தினமொரு உணர்வது புரிகிற புதுமை
அணைத்திடும் ஆயிரம் இனிமைகள் மனதை
அனைத்திலும் பாயிரம் இயற்றிடும் முழுமை.