பூ வாய் மலராமல்

அழகிய பூந்தோட்டம் போலிருந்தாள்

அருகே போனேன் ஆவலாய் பேச

வாடை பூ! வாடாத 'பூ' வாய் மலராமல்

ஜாடைப் பூவாய் கை மலர்ந்தாள்

வாயடைத்துபோனேன்!

வாயடைந்த ஊமை மலரைப் பார்த்து !

அந்தக்குரலிலும் மயிலைப் பார்த்தேன்

அழகான மானையும் பார்த்தேன்

வண்ணத்துப்புச்சியும் வண்ண மலரும்

வாய்ப்பேசாமலேஅழகுதானே!

இந்த 'பூ' வாய் மலராமலே அழகுதான்!

எழுதியவர் : கவிஞர் தமிழாணவ அலெக்சாண் (27-Jun-15, 1:12 pm)
பார்வை : 96

மேலே