காதலும் காதலியும்

அகண்ட உலகம்,
எதையும் தள்ளியும் இணைத்தும் வைக்கும்,
அப்படி அது பிரித்தது,
என்னையும் அவளையும்,
இல்லையில்லை,
அவளையும் காதலையும்,
தைரியமாய் சொல்கிறேன் !
நீண்ட நிறைய யோசனைகளுக்குப்பின் !
பரிசோதனை முயற்சிகளும்,
பரிட்சார்த்த நடைமுறைகளும்,
எத்தனையோ நிகழ்திப்பார்த்தபின் !
கவனமாய் கடந்துசென்றது காதல் !
அது கவர்ந்தும் சென்றது !
நிறைந்து சென்றது !
நிறைத்தும் சென்றது !
கவரப்பட்டேன் அவளால் !
அதனினால் கவரப்பட்டேன் காதலால் !
சந்தர்ப்பம் கடந்து,
சம்பவங்கள் தொடர,
கலவரப்பட்டு,
கவிதைப்பட்டு,
கலக்கப்பட்டு,
கண்ணிமைகள் கசியப்பெற்று,
விரும்பி ஏற்றேன் அவளை அட்சயமாய் !
தொடர்வினைகள்,
தொல்லைக்ககணைகள்,
வீண்விவாதங்கள்,
விரயநேரங்கள்,
விரைந்துமுடிந்த தாபங்கள்,
விளங்கிக்கொள்ள இயலா காயங்கள்,
எல்லாமே தொடர்ந்தன இலக்கில்லாமல் !
எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய இயலா நிமிடங்கள் !
ஆடவைத்தது தலையில் கரகம்கொளுத்தி !
ஆடிப்போனது மதி !
அலைந்துகெட்டது விதி !
ஆசைகளை நிறைவேற்றவும் !
அனுமதிகளை வாங்கித்தரவும் !
கிடைக்காத சுதந்திரங்களை அனுபவிக்கவும் !
பெற்றுப்பேனவா காதல் !
அது உனது அவளது சுயத்தை உரைத்து,
உங்களை உச்சானிக்கொம்பிலேற்றப்பாடுபடாதா?
உங்களுக்குள் உங்களுக்கு உயர்வு தராதா?
உணராமல் போனாளா?
இல்லை இவன் ஒவ்வமாட்டான்,
என்பதனை உணர்ந்து போனாளா?
எல்லாம் முடிந்து எண்ணங்கள் கசிந்து இறங்கி.
தற்போது நான்மட்டும் ஒற்றையாய் நதிக்கரையில்,
நாதியற்ற பெருவெளியில்............
ஒரேயொரு விசயத்தை அழுத்தம் திருத்தமாய்,
அறிவோடு உணர்ந்து..............
போனவள் காதலி...........
போகாத எங்கள் காதல் இதோ என் நிழலில் தங்கி..........

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-Jul-15, 8:11 pm)
பார்வை : 74

மேலே