நீ எனக்கு மழையா
நீ எனக்கு மழையா?
உனக்கும் எனக்கும் தான்
எவ்ளோ முரண்
பாலைக்கும் மழைக்கும்
இருப்பதை போல..
இருக்கும் நீர் எல்லாம்
உள்வாங்கியும் அடங்காத
வெம்மையா உன் ஈரத்துளி
வருகையை எதிர்பார்த்தபடி..
வர வர வாங்கும்
பாலைநிலம் போல நான்
உன்னை வாங்கவே
காத்து நிற்கிறேன் ..
சில நேரம் அனல்காற்று
மணலை அள்ளி தூற்றும்
காற்றை போல உன்னை
வசை சொல்கிறேன்..
சுவாசிக்கிறேனா..
நேசிக்கிறேனா..
உனையே நான்
யாசிக்கிறேனா..
நானோ விளக்கம் தேட
நீ அவகாசம் தராமல்
இடைமறித்தே புள்ளி
வைத்தாய்...
அது முற்றா? முழுவதுமா?
நான் அறியாமல் விழித்தபடியே....
- வைஷ்ணவ தேவி