சொல்லிவிடு அப்பா
சொல்லிவிடு அப்பா..
என் எதிர்காலத்திற்கான பணத்தை
எங்கே சேர்த்து வைத்திருக்கிறாய் என.
எனக்கோ உனக்கோ
ஏதாவது நேர்ந்ததென்றால்
எவனோ அனுபவித்து விட்டுப் போய்விடுவானே
சொல்லி விடு அப்பா..
உள்நாட்டு வங்கியிலா.. வெளிநாட்டு வங்கியிலா..
அரசாங்கம்
கண்டிக்கும்போதே கவனித்துக் கொள்.
தண்டிக்கும் வரை தள்ளிப் போடாதே..
சொல்லிவிடு அப்பா..