நச் வரிகள் கவிஞர் இரா இரவி
நச் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
மெய்யா ? பொய்யா ?
அலகால் கொத்திப் பார்க்கும்
குருவி !
இதற்கு முன் கண்டதில்லை
இப்படி வியப்பில்
குருவி !
கூடு பறிபோன சோகம்
கூவி உரைக்கின்றதோ ?
குருவி !
நிழலை நிஜமென்று நம்பி
ஏமாந்த
குருவி !
பொன்னழகை கண்ணாடியில்
ரசிக்கும் அழகே அழகு
குருவி !
ஆறு வித்தியாசம் தேடி
ஒன்றும் கிட்டவில்லை
குருவி !
அலைபேசி கோபுரங்கள்
அகற்றிட அறைகூவுகின்றதோ?
குருவி !
கண்ணாடி முன்னாடி நின்று
கட்டழகை ரசிக்கின்றதோ ?
குருவி !
உன் ஜோடிக் குருவி இதுவல்ல
உணர் உன் நிழல்
குருவி !
வாகனத்தின் கண்ணாடியில்
வனப்பை ரசிக்கும்
குருவி !