கூட்டிக்கொடுப்பவனும் தமிழக அரசும் -சந்தோஷ்
எனக்கு என்னவோ
இப்படி எழுதுவது கூட
தேவையற்றது என தோன்றுகிறது.
இதை எழுதுவதற்கு பதிலாக
அன்பே.. ஆருயிரே
மானே தேனே...
பூவே.. பொதிகையே
குழலே யாழே
மலையே முகிலே
என வர்ணித்தெழுதினால்
ஏதேனும் ஒரு வார இதழில்
நூறு இருநூறு ரூபாய்
சன்மானம் பெற முடியும்.
என்ன செய்ய...?
வெளியே செல்ல முடியாது..
‘தம்’ அடிக்கவும் முடியாது.
பெட்டிக்கடை மூடியிருப்பார்
ராமசாமி தாத்தா..!
இல்லையென்றால்
புகையூதி மனம் ஆறியிருப்பேன்.
சரி எழுதித் தொலைக்கிறேன்...!
சின்னஞ்சிறு பயலுக்கு
மாமன்காரன் ஒருவன்
ஊத்திக்கொடுத்தானாம்
டாஸ்மாக் சாராயத்தை....!
” அடத் தேவ.... பயலே..............! “
என எழுதினால்
கவிதை நாகரீகம் போய்விட்டது
என கூக்குரலிட ஆயத்தமாகும்
மேதாவி இலக்கியவாதிகளே.......!
ஒன்று மட்டும் எழுதி
இதை கவிதையில்லையென
பிரகனப்படுத்திவிடுகிறேன்....
கட்டினப் பொண்டாட்டியை
கூட்டி கொடுப்பவனுக்கும்
தன்
குடிமக்களுக்கு ஊத்திக்கொடுக்கும்
டாஸ்மாக் முதலாளியாம்
தமிழக அரசுக்கும்
பெருத்த வித்தியாசமில்லையே......!
நல்லவேளையாக
எந்த வாக்குப் பிச்சைக்கார அரசும்
விபச்சார மையம் திறக்கவில்லை.
திறந்திருந்தால்...
எந்த மாமனோ மானங்கெட்டவனோ
பெத்த பிள்ளைக்கு கூட
ஆணுறையின் செய்முறையினை
சொல்லிக்கொடுத்திருப்பான்.....!
அரசாங்கமாம்...
ராஜ்ஜியமாம்..
மண்ணாங்கட்டியாம்..
மயிராம்.........
கொஞ்சம் மனம் தேற்றிக்கொண்டேன்.
பின்னே..
எழுதி என்னத்த கிழிக்க......................!!
--
-இரா.சந்தோஷ் குமார்