ஆச்சரியம் கொண்டேன்

துள்ளி திரியும் பட்டாம்பூச்சி
தன் நிறம் உன் மடி
விட்டு செல்லும்

ஆச்சரியம் இல்லை!!!

மேகம் துளைத்த மழை துளிகள்
அவள் மேனி பட்டு
வைரங்களாய் வீழ்ந்தால்

ஆச்சரியம் இல்லை!!!

அவள் முடிசூட துடிக்கும்
பூக்கள் அவளுக்காக
தற்கொலை செய்து கொள்ளும்

ஆச்சரியம் இல்லை!!!

அவளின் முகம் பார்த்த முழுமதி
வெட்கத்தில் திங்கள் முழுதும்
அமாவாசை ஆகும்

ஆச்சரியம் இல்லை!!!

வரைந்து வைத்த ஓவியம்
உன் மூச்சுபட்டு உயிர்பெற்று
உலாவி திரியும்

ஆச்சரியம் இல்லை!!!

உன் விரல் பட்டால் கல்லுக்குள்
இதயம் துடிக்கும்

ஆச்சரியம் இல்லை!!!

வானவில் உந்தன் கையில்
வளையல்கள் ஆகும்
விண்மீன்கள் யாவும் உன்காலில
கொலுசின் மணிகளாகும்

ஆச்சரியம் இல்லை!!!

தேவதைகள் உன் அழகில்
மயங்கி அடிமைகளாகும்

ஆச்சரியம் இல்லை!!!

உதிர்ந்த சருகும் உன்னால்
படர்ந்த பசுமை மரமாகும்

ஆச்சரியம் இல்லை!!!

ஆனால் பெண்ணே
ஆச்சரியம் கொண்டேன்

அழகு பதுமை
எனக்காக என்னருகே!!!

எழுதியவர் : சரவணன் (7-Jul-15, 8:54 pm)
Tanglish : aachariyam konden
பார்வை : 95

மேலே