மழலை
தித்தித்திட தித்தித்திட திக்கித்திடும் திக்கிப்பதும்
== தித்திப்பெனத் தித்தித்திட தித்தித்திட
தத்தித்தவழ் வித்தைகளின் யுத்தத்தினில் சித்தத்தினை
==தொத்திக்கொளும் கொத்திகொளும் தத்தையது
சித்தங்குளிர் வித்தித்திடும் ரத்தத்தினில் புத்தம்புது
== சத்திதரும் யுக்திக்கொரு வித்துமிடும்
கத்துங்குரல் சத்தத்திலும் முத்தம்பெரும் முத்துச்சரம்
==கொத்துமலர் கத்தையது நித்தம்சுகமே!
*மெய்யன் நடராஜ்