நீதானே

பிரானா மீனாக நெஞ்சை
பிடிங்கி தின்றவளும் நீதானே
சுனாமி பார்வையால் என்னை
சுழற்றி போட்டவளும் நீதானே
கரும் பலகை நெஞ்சில்
கவி எழுதி போன
சுன்னக்கட்டியும் நீதானே
பாம்பெதிரே இருந்தாலும்
பதறாத என்னை சிறு பார்வையால்
சிதற வைத்தவளும் நீதானே
ஓர் ஆயிரம் கூட்டத்தில்
ஓளி வேக நேரத்தில்
பார்த்தவளும் நீதானே
ஆவிகளே உறங்கும்
அழகான இரவில்
தேவதை என்றும் உன்னோட நினைவில்
தெருவெல்லாம் அலைய வைத்தவளும் நீதானே
நிம்மதியாக இருந்த நேரத்தை
நினைக்க வைத்தவளும் நீதானே
நீதானே நீதானே எல்லாமே நீதானே
நிம்மதி இன்றி நான்தானே
நீ இல்லா உலகத்தில்
இறக்காமல் இருக்கேனே .........

எழுதியவர் : அரவிந்த்ரெனால்ட்.லூ (9-Jul-15, 11:25 am)
Tanglish : neethanae
பார்வை : 160

மேலே