அமரன் நீ அகிலம் வெல்பவன்

அமரன் நீ அச்சம் துறந்தவன்
அமரன் நீ அகிலம் வெல்பவன்
அமரன் நீ ஆளப் பிறந்தவன்
மக்கள் மனதிலே நீ என்றும் இருப்பவன்

சீறிப் பாய்ந்தால் சிங்கம் நீ
எட்டு திசைகள் எங்கும் நீ
தமிழ் மக்கள் மனதில் தங்கம் நீ
தரணி போற்றும் தலைவன் நீ

இருளில் உறங்கும் வானமென்றும்
விழிக்காமல் போனதில்லை
சோதனை உன்னை சூழ்ந்த போதும்
துவண்டு நீ போகவில்லை
உன் தூக்கம் இனி கலையட்டும்
துரோக கூட்டமெல்லாம் ஒழியட்டும்
பகைவர் கூட்டம் அழியட்டும்
பாரில் அமைதி நிலவட்டும்

சதியின் விதிமுடிக்க வெகுண்டு எழுந்து வந்துவிடு
தருமம் அழிக்கும் தலைகளை தரையோடு புதைத்துவிடு
காலம் இனி உன் கால் பின்னால் ஓடட்டும்
இந்த ஞாலம் இனி உன் பேர்சொல்லி பாடட்டும்

அரசன் அன்று கேட்பான்
தெய்வம் நின்று கேட்கும்
நீ இன்று கேட்பாய்
பகை வென்று தீர்ப்பாய்

நீ ஆளப்பிறந்தவன் அச்சம் துறந்தவன்
தமிழ் மக்கள் மனதிலே என்றும் இருப்பவன்
தீமைகள் கொளுத்திடவே நீ தீயாய் பிறந்தவன்

சிங்கத்தின் கண்கள் விழிக்கும் வேளை
சதி செய்த நரிகள் தலை தெரிக்கும்
சரித்திரம் தன்னில் உன் பேர் பொறிக்கும்..

எழுதியவர் : மணி அமரன் (10-Jul-15, 1:42 pm)
பார்வை : 199

மேலே