செம ஜோக்

ஓருவர்: வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...! என்ன தப்பு செஞ்சீங்க?

மற்றவர் : நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!

திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!

போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!

ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.

தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!

சிறைச்சாலைக்குள் ஒரு புதிய கைதி தள்ளப்பட்டான். அவனிடம் அங்கிருந்த பழைய கைதி என்ன குற்றத்திற்காக நீ சிறைக்கு வந்தாய் என்று கேட்டான்.

கைதி - நான் ஒருவருடைய தோட்டத்திலிருந்து கயிறு ஒன்றை என் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தேன்.

ப.கைதி - கயிறு திருடியதற்காகவா உனக்கு சிறைத் தண்டனை தரப்பட்டது?
கைதி - அந்த கயிற்றின் மறுமுனையில் ஒரு பசு மாடு மட்டும் தனது கழுத்தை நுலைத்திருந்தது.

எழுதியவர் : பிதொஸ் கான் (14-Jul-15, 1:59 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : sema joke
பார்வை : 270

சிறந்த நகைச்சுவைகள்

மேலே