ரீசார்ஜ்

மொபைல் சிணுங்கியது ..
வாசுவுக்கு தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்துக் கொண்டுதான் இருந்தான்.அதனால் கைக்கெட்டும் தூரத்தில் சிணுங்கிய போனை படுத்தபடியே எட்டிக் கவர்ந்தான் வாசு . .
வாசு என்ன பண்ற? எழுந்திட்டியா ?
எதிர்முனையில் புதிதாய் வாசு வேலைக்கு சேர்ந்த கம்பெனி சீனியர் குரல் அது .
ஆமாம் சார் என்றான், சோம்பலாய்.
ரெடியா இரு , அரைமணியில வரேன்
பதில் எதிர்பாராமல் கட் பண்ணி விட்டார்.
வாசுவுக்கு இன்று விடுமுறை . .திருப்பூரில் ஞாயிறு விடுமுறை தரும் தயாரிப்பு நிறூவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதுவும் சில ஆண்டுகளுக்கு பிறகு விடுமுறையை அனுபவிக்கிறான் .பழைய கம்பெனி விசேச நாட்கள் கூட கதவைச் சாத்தி விட்டு வேலை பார்ப்பார்கள் அது இங்கு இருக்கும் எல்லோருக்கும் ஒரு வியாதி போல லீவு விட்டால் என்ன செய்வது என்று கூடத் தெரியாது .அவனுக்கும் அன்று அப்படித்தான் தோணியது .நல்ல வேளை ..சீனியர் போன் காப்பாற்றியது .
மணியை பார்த்தான் 7.15
ஏழு மணிக்கெல்லாம் பக்கத்து ரூமில் பேப்பர் வந்து இருக்குமே ?
வெளியே எட்டிப் பார்த்தான் ..
பக்கத்து ரூம் வாசலில் பிரிக்கப்படாமல், போட்ட படி அன்றைய நாளிதழ் கிடந்தது .
வாசுக்கு ஒரு பழக்கம் உண்டு அனுமதியில்லாமல் யார் பொறுளையும் தொட மாட்டான்.
சரி சீனிய வருவதர்க்குள் குளித்து ரெடியாவோம் என்று நினைத்துக் கொண்டு குளியறைக்குள் தஞ்சமடைந்தான்.
குளித்து விட்டு மீண்டும் பக்கத்து ரூமில் பேப்பர் எடுத்து விட்டார்களா சீனிய வருவதர்க்குள் ஒரு பார்வை பார்த்து விடுவோம் என பார்த்தால் இன்னும் பேப்பர் அதே நிலையில் கிடந்தது ..
சரியாக அரை மணியில் சீனியர் பைக் சத்தம் கேட்டது .
பூட்டைத் தேடி எடுத்து வெளியே வருவதர்க்குள் அவரே கையில் பேப்பர் படித்துக் கொண்டே ரூமிற்குள் வந்து விட்டார்
வழக்கத்துக்கு மாறாக மிக நேர்த்தியாக உடையணிந்து இருந்தார் .
எப்ப இருந்து சார் பேப்பர் வாங்கும் வழக்கம் ? என்றேன்.
நான் எதர்க்கு வாங்கறேன் உனக்கு பக்கத்து ரூம் ஸ்டோர் கீப்பர் பொன் ராம் வீட்டு வாசலில் இருதுச்சு …
மெயின் ரோட்டுக்கு வரும் போது கேட்டேன்.
எங்க சார் போறோம் ?
ச்சே ! அபசகுணமா கேட்க்க கூடாது.ஒரு முக்கியமான ஆள் பார்த்துட்டு ,போனுக்கு ரீ சார்ஜ் பண்ணனும் என்றார் .
அதற்கு மேல் கேட்க்க கூடாது.என்று தோணியது .
ஆனால் இதர்க்கு ஏன் நம்மை கூட்டீட்டு போகணும் என்பது மட்டும் புரியவில்லை !
ஒரு காம்பவுண்ட் வீட்டு முன் வண்டியை நிறுத்தினார் .
வாசு இரு வந்துடுறேன் என்று வேகமாக உள்ளே போனார் .
சின்ன வாசல் கதவு .ஒருவர் உள்ளே போனால் அடுத்தவர் காத்து இருக்க வேண்டி இருக்கும் .
வாசலில் கோளம் புள்ளிகளை தவறாக வைத்து அழித்துப் போட்டு இருந்தது .சில இடங்களில் இரண்டு கோடுகள் தெரிந்தது .
வாசு, வாசு
உள்ளே போன சீனிய குரல் .
உள்ளே போனேன் .இரண்டு வீடு மட்டுமே உள்ள வீடு போல !
ஒரு அஞ்சு நிமிசம் இந்த வீட்ல உள்ள உட்கார். வந்துடறேன் என்றார்
அவர் காட்டின வீட்டில் ஆள் இல்லையென்பது தெரிந்து .கொஞ்சம் தள்ளி இருந்த பக்கத்து வீடு உள்ளே பூட்டியிருந்தது .
இல்ல சார் நான் வெளியில நிக்கறேன் என்றேன்.
அட கூச்சப்படாத நம்ம பய வீடுதான் என்று சொல்லிக் கொண்டே .கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார் .
அதில் அவரிடம் ஒரு அவசரம் இருந்தது போல எனக்கு தோணியது
இரண்டு அறை உள்ள வீடு .
வேறு வழியில்லாமல் அங்கு இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டேன் .
டி.வி இருக்கு பாரு ,என்று ஆன் செய்து,ரிமோட்டை திணித்து விட்டு வெளியே சென்றார் .
அறையில் மென்மையாய் ஒரு பூ வாசம் பரவி இருந்தது .மிக சமீபத்தில்தான் பூ வைத்தவர் இந்த அறையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் .
அதர்க்குள்
டிவியில் புதிய தலைமுறை செய்தி ஓடிக்கொண்டு இருந்தது.எங்கோ ஒரு ஊரூக்கு ஒதுக்குப் புறமான வீட்டில் நடந்த கொள்ளை செய்தி அது .
செய்தி வாசிப்பவர் .அந்து பகுதி மக்கள் அந்த திருட்டால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொன்னார் .
கொள்ளை நடந்த வீட்டூக்கு எதிரில் சினிமா போஸ்டரில், நயன்தாராவை சில பேர் கழுத்துக்கு கீழ் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .
அப்போதுதான் டீவிக்கும் மேல் உள்ள திருமண கோலத்தில் ஒரு போட்டோவைப் பார்த்தேன் .
எங்கோ அந்தப் பெண்ணை பார்த்த மாதிரி இருந்தது
எனக்குள் சிரித்துக் கொண்டேன்
என் நண்பன் ஒருவனிடம் ஒருமுறை ,யாரைப் பார்த்தாலும் எங்கோ பார்த்த மாதிரி தெரியுதே ஏண்டா என்றேன்
அது ஒரு வியாதிடா .யாரையாவது மனசு தேடிக் கொண்டே இருந்தா யாரைக் கண்டாலும் மனசு அவங்க முகத்து மேல நமக்குத் தெரிஞ்ச முகத்த ஒட்டிப் பார்த்துக்கும் என்பான் .
அப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது .பைக்கை விட்டு வந்த சீனியர் சாவியை எடுக்காம வந்துட்டாரு நாம் நம்ம சாவியை பாக்கெட்டுல போட்டுட்டு வந்துட்டமே ?
.சட்டேனெ அறையை விட்டு வெளியே வந்தேன் .
பைக் இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தது.
அப்ப சீனியர் நடந்து போயிட்டாரா ?
ரீ சார்ஜ் பண்ணனும்ன்னு வேற சொன்னாரே ?
யோசித்துக் கொண்டே இருந்த மனம் தானாகவே தள்ளி இருந்த அறை மீது பார்வையைத் திருப்பியது.
இன்னும் அந்த கதவு அப்படியே சாத்தியே இருந்தது .
மெல்ல அந்த கதவருகே போனேன் .
சீனியர் மொபைலை கூப்பிட்டேன் .
உள்ளிருந்து ,போன் ஒலித்தது ..
ஆனால் யாரோ அவசரமாக போனை கட் பண்ணியதும் , அதே வேகத்தில் சில வளையல் சத்தமும் கேட்டது .
வீட்டு வாசலில் வண்டிச் சாவியை வைத்து விட்டு, அந்த காம்பவுண்டை விட்டு வெளியேறினான்..