வெள்ளை ரோஜா

எரிந்து போன திரியின் புகை மட்டும்
மாட விளக்கை சுற்றி கொண்டு இருந்தது....

ஈசான மூலைல கௌலி கத்திகிட்டே இருந்தது...

வாசல்ல படுத்து இருந்த கருப்பும் எதவோ பாத்து வொவ், வொவ் ன்ச்சு...

இப்படி சாதரணமா நடக்குறது போலவே இவ கண்ணீர் சிந்துரதும் சாதரணமா ஆயிடுச்சு..

கண்ணீர துடைச்சே முந்தானை நனைஞ்சு போச்சு....

ஏன் மவராசன் போன அன்னைக்கே நானும் போய்டுப்பேன்....

ஒத்த புள்ள அனாதையா ஆய்புடும்ன்னுதேன்

நெஞ்சுல அம்மிகல்ல வச்சுட்டு திரியுரேன்....

புல்லுகட்ட தூக்கிவிட்ரேன்னு கைய பிடிக்கிறான் ஒருத்தேன்....

புளிய மரத்து வெட்டிபயலுக
சாட பேசுரானுக...

உன் பொரியாத்த மகன் என்ன மதினி எல்லாத்தையும் நான் பாத்துகிறேன் என்ன சொல்டரன்னு கேக்குறான்.....

மச்சான் உனக்கு விரிச்ச இந்த முந்தானைல ஊர் நாய் படுக்க ஆசை படுது....

பாசமா பேசுற மாதிரி
வேஷம் போட்டு திரியுர ஓநாய்க....

நான் கண்ணகி மச்சான் நீ போன பிறவு நான் நெருப்பாய்டேன்...
யாரும் நெருங்க முடியாது...

ஏன் கண்ணீரு உனக்கு மட்டும்தேன் தெரியும்....

புருஷன் இல்லனா எல்லாரும் வேசி ஆய்டுவாகனு நெனைக்குற பயலுகளா...

நாளைக்கு நீ செத்தாலும் உன் கண்ணகிய,
மாதவியா தான் பாப்பனுக

உங்க நெனப்ப மாத்துங்கடா.........

_மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (17-Jul-15, 11:22 am)
Tanglish : vellai roja
பார்வை : 240

மேலே