கனவுகளின் பயணம்
திரு
மேதகு அப்துல் கலாமே !
கனவை வென்ற
எம் அறிவியலே !
உங்களின் லட்சியமும்
ஒரே எண்ணமும்
களைப்படையா
சிந்தனைகளுடன்
ஒரு பயணம் ,
முடிவில்லா தூரம்
உங்கள்
நெடுந்தூறப் பயணம் !
அனால் -
நிரந்தரமாய் ஓரிடம்
ஓய்வெடுக்கும் நிலை
இது இறைவனின் திட்டம் !
உங்கள் வல்லரசு
வேட்கையை
எங்களுள் பற்ற வைத்திரே !
எங்கள் அறிவியல் குருவே
அணு நாயகனே
எங்களின் ஜனாதிபதியே !
உம்மை வணங்குகிறோம்
எங்கள் மேதகு ஆசானே ! ...