ஒட்டி வராதே
கதை அரங்கேறி முடிந்தாகிவிட்டது.
இன்னும் என்ன நடிப்பு.
நாடகம் அமைப்பில் நான்
ஒரு கில்லாடிதான்.
ஆனால் நடிப்பில் நீ விஞ்சி
நிற்கின்றாய்.
பின் ஒட்டி நின்று ரசிக்க, கை கட்டி
நிற்க அவசியம் என்ன.
விட்டு விடு, தொட்டு நடக்க நான்
ஒன்றும் நல்லவனில்லை.
பட்டு நின்று, சொட்டி மறுக்க நான்
ஒன்றும் கெட்டவனுமில்லை.