என் அன்புத் தங்கை

என் தோழி வழி
கிடைத்த முத்து,
என் மீது அப்பளுக்கற்ற
பாசம் காட்டும் சொத்து ,

நான் சிரிக்க அவள்
சிந்திதுடுவாள் ....
என் சுமைகள் கூட
அவள் சுமந்திடுவாள் ....
குறும்பு சில செய்து
என் குழந்தை ஆகிடுவாள் ...
குழப்பம் நான் கொண்டால்
எனக்கு ஊக்கம் அளிதிடுவாள்.

என் தாய் வைற்றில்
பிறவாமலும் அன்பால்
என் தங்கை ஆனவள்
அண்ணனாக என்னை
மனதில் சுமந்து
என் அன்னை ஆனவள் ...!!

குருதியில் தொடர்வதில்லை
உறவு ...-என்றும்
நல் உள்ளம்தனில்
உதிப்பதே உறவு
என உணர்த்தியவள்

என் மனத்தோட்டத்தில்
பூத்த பாசமலர் -உன்
அன்பால் என்றும்
நான் வாடாமலர் ..!!

காலதேவன் எனக்கு அளித்த
அறம்...
என் தங்கையாக எனக்கு அமைந்த
நீ நான் செய்த வரம் ..
இனி உன் ஒவ்வொரு மணித்துளிகளும்
இவனால் சந்தோசமும் ,அமைதியை
மட்டுமே அள்ளித் தரும்.....

என்றும் ...என்றென்றும் ...
jeevan

எழுதியவர் : ஜீவன் (7-Aug-15, 8:02 pm)
Tanglish : en anbu thangai
பார்வை : 9155

மேலே