உனதற்ற தருணம்

வேறென்ன
பெரிதாகக்கேட்டுவிடப் போகிறேன்,,,
உன்னை அருகாமலேயே
நேசித்துக் கொண்டிருப்பதைவிட ம்ம்ம்ம்,,,
ஒவ்வொரு முறையும்
எனக்கான தண்டனைக்கு தீர்ப்பெழுதி
உடைக்கக் காத்திருக்கும்
உன் பேனா முனைக்கு
மீண்டும் ஏதேனும் எழுதிவிடும் மிச்சத்தை
விட்டுப்போகிறேன் ,,,ஆம்,,
நானுன்னால் சபிக்கப்பட்ட பாவியுமானவன் போல்
உனதற்ற தருணம் என் விரல்கள்
வீரியமில்லாத
வெறுஞ்சொற்களையே பொழிகின்றன ம்ம்ம்

அனுசரன் - முற்றும்

எழுதியவர் : அனுசரன் (14-Aug-15, 2:06 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே