மரணப் பாக்கள் - சந்தோஷ்

ஒவ்வொரு தனிமையிலும்
நான் புத்தனாகி விடுவதும்
ஒவ்வொரு பிரச்சினையிலும்
நான் பித்தனாகி விடுவதும்
ஒவ்வொரு தோல்வியில்
நான் சித்தனாகி விடுவதும்
ஒவ்வொரு இன்பங்களிலும்
நான் மன்மதனாகி விடுவதும்
இவ்வாறான
ஒவ்வொரு சிந்தனையிலும்
நான் கவிஞானகி விடுவதும்
வாடிக்கையாகி வாழ்கையாகி
இறுதியில் வரும்
என் மரணத்தின் நொடியில்
நான் ஒரு மகானாகி விடுவேன்(னோ). ?

***

எனக்கு மரணப்பித்து பிடித்திருக்கிறது.
ஆனால்
மரணத்தை பிடிக்கவில்லை.

ஒரு "ச்சீ " யிலும்
ஒரு "த்தூ"விலும்
மனமுடையும் போதெல்லாம்
குணமாக்கிவிடுகிறது
எனக்குள்ளிருக்கும்..
மரணச் சிந்தனை...!

****
தப்பில்லை தவறில்லை
மரணத்திற்கு முந்தைய
அனுபவம் சொல்லிக்கொடுப்பதை
கற்றுக்கொள்வதைவிட
வேறு வழியில்லை..!

***

'அடுத்த நிமிடத்தில்
நான் பிணமாகிவிடுவேன்
இப்படி சிந்தித்தால் போதும்
இந்த நொடியில்
ஏதேனும் ஒரு கவிதைக்கு
சொந்தகாரனாகி விடுகிறேன்.
ஏதேனும் ஒரு தத்துவத்திற்கு
தாயாகி விடுகிறேன்.

***

காதல் நிறைவேறினால்
கல்யாண மேடை
நிறைவேறாவிடில்...
இலக்கிய மேடை..

ஆம் ..காதலுணர்வுக்கொலை.
ஒரு கவிஞனை உருவாக்கிவிடும்..
அபாயகரமாக
சில வேளைகளில்...
ஒரு டாஸ்மாக் வாடிக்கையாளனையும்..

**
அடடா மனமே...!
இன்னுமென்ன வேதனை...
உயிரில் உற்சாகம் ஊற்று..
உடலில் உத்வேகம் கூட்டு..
மரணம் வரும்போது
வணக்கம் கூறு..!
அதுவரையிலும்
ஒரு சாதனையாளனாக
ஏதேனும் அடித்தளம் போடு..!

***


இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (14-Aug-15, 1:29 pm)
பார்வை : 104

மேலே