அவளுக்கு அழகான அவள்

கருமேக கூட்டங்களின் சாயல் அவள்
அழகானவள் பட்டியலில் சேர்க்கப்படாதவள்...!!

ஆனால், அவளோ அதற்கெல்லாம்
கவலைப்பட்டதாய் தெரியவே இல்லை.. !!
புன்னகையை தவிர, அவள் எந்த
பொன்னகையையும் விரும்பவும் இல்லை..!!

இவள் வீட்டு வாசலை, எந்த கம்பனும், கண்ணனும்
நாடவும் இல்லை.. !!
அவளும், எந்த ஒரு ராமனையும் தேடவும் இல்லை..!!
வண்ணமுடன், வலம் வரும் வண்ணத்துப்பூச்சியை
அவள் பெரிதாக ரசித்ததும் இல்லை.. !!
நன்றியுடன் வாலாட்டும் நாய்க்குட்டியை
அவள் ஒருநாளும், ரசிக்க மறந்ததும் இல்லை.. !!

இல்லாததை நினைத்து ஏங்கும் நேரவிரயங்கள்
அவளிடத்தில் இல்லவே இல்லை.. !!
யாவரின் செய்கையையும், அன்புக்காகவா!?, அழகுக்காகவா !? என
ஆராயும் தேவைகளின், தேவை அவளுக்கு தேவைப்படவும் இல்லை.. !

மொத்தத்தில் அழகில்லை, என்பது ஒரு வரமென்று
வாழ தெரிந்தவள், அந்த
அவளுக்கு அழகான அவள்.. !!

எழுதியவர் : நிஷாந்தினி.k (14-Aug-15, 12:52 pm)
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே