நெசவு

ஞாலத்தை காக்கும் அறம்போல ஞாலத்தின்
மானத்தைக் காக்கும் நெசவு

தறிகொண் டுலகத்தார் தன்மானங் காக்கும்
நெற்கொண் டொழுகும் நெசவு


ஒருகாலில் நிற்கும் உயர்தவத்தின் மேலாம்
இருகாலில் செய்யும் நெசவு

வையத்தின் நிர்வாணம் மாற்றுந் துணிகொடுக்க
நெய்யுங்கை செய்யும் நெசவு

சுழலும் இராட்டைபின் செல்லும் புவனம்
தொழநின் றுதவும் நெசவு

எழுதியவர் : சு.அய்யப்பன் (14-Aug-15, 12:24 pm)
பார்வை : 1560

மேலே