நீ வருவாய் என

வார்த்தைகளாக இருந்தாலும் சரி
அதில் வாசிக்க படுவது
உன் நினைவுகளித்தான் ..,

பார்வைகளாக இருந்தாலும் சரி
அதில் தோன்றும்
பிம்பம் உணதாகதான் ..,

போகும் பாதைகளை மறந்தாலும்
போகாமல் நிக்கிறது
உன்னோடு கை கோர்த்த பாதைகள் ..,

சேரும் நீரும் கலந்தாலும்
அதில் நீர் மட்டும்தான்
மேல தேங்கி நிற்கும்
அது போல
உன்னோடு இருந்த சந்தோசங்கள்தான்
என்னை மறந்து சென்றதால் வந்த வலிகளை விட
முன்னே நிக்கிறது ..,

கண்ணாடியில்
எழுதாமல் எழுதுகிறது
கண்ணீர் துளிகள்
கண்ணாடிமுன் நான் நிற்கையில்
அதில் தோன்றும் உன் முகத்தால் ..,

மஞ்சள் தேய்த்த முகத்தில்
மாறி போய்விட்டது
சிவப்பாக
அழுது அழுது
வற்றி போய்விட்டது கண்ணீரும் ..,

நீ வரமாட்டாய் என்றும் தெரிந்தும்
வாசலில் எதிர்பாக்கிறேன்
உனக்காக
தினம் தினம் புதுபிக்கும்
கோலமாக ..,

எழுதியவர் : காந்தி (14-Aug-15, 11:41 am)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 103

மேலே