2016 தேர்தல் அறிக்கை

(இது போல் ஒரு தேர்தல் அறிக்கையை ஏதாவது ஒரு அரசியல் கட்சி வெளியிட்டால் நல்லது என்ற ஆதங்கத்தில்)

பொதுத் தேர்தல் தேதி அறிவித்ததும் செல்வாக்குள்ள கட்சி ஒன்றின் தலைவர் அறிவிக்கிறார்:

என் உயிரினும் மேலான வாக்காளாப் பெருமக்களே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆபாசம், வன்முறை, பாலியல் வன்கொடுமை ஆகிய அனைத்தும் நடக்காமலும் அவை பற்றிய காட்சிகள் மலிவான பொழுது போக்குகளான திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்களில் காட்டப்படுவதற்கு சட்டப்பூர்வமான தடை விதிப்போம். தமிழ்ப் பெயர்களை மட்டும் தலைப்பாக வைத்துக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கான கருத்தும் கதையும் இல்லாத் திரைப்படங்களுக்கு வரிச் சலுகை கிடையாது. எல்லாத் தொழில்களிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆட்களைத் தேவையின்றி இறக்குமதி செய்வதிற்கு தடை போடுவோம். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் வளத்தை பெருக்குவோம். மதுவை தமிழ் மண்ணைவிட்டே விரட்டுவோம்.

எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். இதுவரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்றை எங்கள் கட்சி செயல்படுத்தி உலகிற்கே வழிகாட்டப்போகிறது:

எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் கூலி வேலை செய்பவர்களோ, வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்பவர்களோ அல்ல. எனவே நாங்கள் ஆட்சி அமைத்தால் முதல்வர், அமைச்சர்கள், பேரைவைத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் சம்பளம் மற்றும் இதரப் படிகள் (அலவன்ஸ்) எதையும் பெறமாட்டர்கள். தேர்தலில் எங்கள்: கட்சி சார்பில் போட்டியிடும் அனைவரும் தனித்தனியாக
ஒரு உறுதி் மொழிப்பத்திரத்தை அச்சிட்டு தகுந்த சாட்சிகள் முன் கையொப்பம இட்டு அவரவர் போட்டியிடும் தொகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அந்தப் பத்திரங்களை எங்கள் கட்சியின் பொதுச் செயலளாரிடம் சமர்பித்துள்ளனர். அந்தப் பத்திரங்களை (ஒளிப்பதிவு - ஸ்கேன் - செய்து) எங்கள் கட்சியின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம, பத்திரங்கள் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ளன.
வலைத் தளத்தில் பி.டி.எப் வடிவில் உள்ள பத்திரங்களை தேவைப்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசியல் சார்புடைய யாரும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படமாட்டார்கள். வாரிய்ங்களில் உள்ள எந்தப் பதிவியிலும் அரசியல் சார்புடைய
யாரும் நியமிக்கப்படமாட்டார்கள்.முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், பேரவைத் தலவைர் துணைத்தல்வர் ஆகிய அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களைத் தான் பயன்படுத்துவார்கள். அந்த வாகனங்களில் சிவப்பு விளக்கு பொறுத்தி கொள்ள அனுமதிக்கப்படுவர். சொந்த அலுவல் சம்பந்தமாக செல்லும் போது சிவப்பு விளக்கைப் பயனபடுத்த அனுமதி இல்லை. பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் தான் பயணிக்க வேண்டும்.
விமானம் தொடர் வண்டி ஆகியவற்றில் பயணிக்கவும் அரசுப் பணத்தைப் பயன்படுத்த முடியாது. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளின் இடையூறு
இன்றி சுதந்ததிரமாக செயல்டுவார்கள். முதல்வர் முதல் ச.ம.உறுப்பினர்கள் மற்றும் எங்கள் கட்சியைச் சேர்ந்த யாருமே அதிகாரிகளின் பணியில் குறுக்கிடமாட்டார்கள்.

ஒரு ச. ம. உ. பணியாற்ற இயலாத அளவுக்கு உடல்நிலை மோசமாக இருதால் மட்டுமே பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்கப்படுவார். எனவே தேவைற்ற இடைத் தேர்தலை மக்கள் மீது திணிக்க மாட்டோம். எங்கள் கட்சியைச் சேர்ந்த ச.ம. உ ஒருவர் மரணம் அடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் இடைத் தேர்தலை நடத்த செலவாகும் தொகையைத் தேர்தல் ஆணையத்திற்கு செலுத்திவிடுவோம். அதற்கு வேண்டிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர பாராளுமன்றத்தில் அழுத்தமான குரல் கொடுப்பதோடு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தரும்படி கேட்போம்.

எங்கள் வலைத் தளத்தில் உள்ள பத்திரத்தின் பிரதியை வீடுதோறும் வழங்குவோம். இது தான் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை. ஊழல் அற்ற, மதுவில்லா, மகளிர் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான குற்றங்கள் தடுக்கப்படும் வளமான தொழில் வளர்ச்சி பெருகி வேலையற்றோர் இல்லாத் தமிழகத்தை உருவாக்க எங்கள் கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.

எழுதியவர் : மலர் (18-Aug-15, 6:07 pm)
பார்வை : 249

சிறந்த கட்டுரைகள்

மேலே