விடா முயற்சி வெற்றி தரும்

வெற்றி என்பது
ஒரு இலக்கு,

கண்ணுக்கு எட்டுவது
கைக்கு எட்டும்

கைக்கு எட்டினால்
காரிருள் விலகும்

தோல்வியை
தொட்டாலும் தொடர்ந்தாலும்
அதன் எல்லையில் தொடங்கும்
வெற்றியின் விளிம்பு

அது வரை தான் உனக்குள் விசும்பல்
பின் வெற்றியை சுவாசிக்கும் போது

மலைகூட மண்டியிடும்
மதில்கூட வழி விடும்
துயில் நீக்கி துடித்தெழு

விழியோரம் வழியுண்டு
விரும்பாமல் இங்கு எது உண்டு,

சொல் உனக்கு ?

எழுதியவர் : செல்வமணி (22-Aug-15, 1:06 pm)
பார்வை : 407

மேலே