முயற்சி

லேசாகும் மனதின் மேலான தேவை அது
சின்ன சின்ன ஆசை அதற்கு போதும் ஒரு முயற்சி !

அந்த லேசான மனம்
யாரேனும் சீண்டினால் சாடினால்
எடுக்குமே ஒரு வேகம்
அதுவே புது உத்வேகம்

அப்பொழுது உதிக்குமே
அது தான் வெற்றியை நோக்கும் ஒரு வெறி

ரத்தம் நிறம் எடுத்து
நாளம் தரம் மிடுக்கும்
கோபம் கொப்பளித்து
எடுக்கும் அந்த முயற்சி

அது ஒரு விடா முயற்சி
அது தொடாத எல்லையே இல்லை,

எழு விழு தொடு விடு மீண்டும் மீண்டும்
இலக்கு என்பது ஒரு புள்ளியே
நீ நாடினால் தான் அது உன்னை தேடி வரும்
திசையை அறியவும் விசையுடன் விரையவும்
உணர்வுடன் செல் உறுதியுடன் செல்

வெற்றியாளன் நான் என நினைக்கையில் மட்டுமே
வெற்றி உனக்கு இலக்கு !
இல்லையெனில்
வெற்று இலக்கு தான் உனக்கு !

எழுதியவர் : செல்வமணி (22-Aug-15, 1:38 am)
Tanglish : muyarchi
பார்வை : 1275

மேலே