சுகாதாரமும் தமிழனும்
மருத்துவ கழிவுகளையும் , காய்கறி கழிவுகளையும், மாடு , ஆடு , கோழி, பன்றி போன்ற இறைச்சிவகை கழிவுகளையும் கேரளா தமிழ்நாட்டுல கொட்டி வருது. சமீப காலமாக இது அதிகரிச்சி இருக்கு. நேத்து கூட பட்டபகல்ல ஒரு லாரி நிறைய கழிவுகளை மக்கள் தடுத்து இருக்காங்க. அந்த லாரி துத்துக்குடி நோக்கி பயணப்பட்டு இருக்கு. தமிழ்நாட்டு கடலோரங்களையும் மாசு படுத்த கேரள வணிகர்கள் துணிந்து விட்டார்கள் என்று தான் இது காட்டுகிறது. தமிழ்நாட்டு எல்லையோர மாவட்டத்துல இது பெரிய பிரச்சனையா உருவெடுத்து இருக்கு.
தமிழ்நாட்டு உணவு பொருள்களை கேரள அரசால் தடுக்க முடியும் என்றால் ஏன் நம் தமிழக எல்லையோர காவல் துறையால் தடுக்க முடியவில்லை. இல்லை தடுக்க விரும்பவில்லையா ? கேரள அரசை நாம் இதில் குறைசொல்லுவது அர்த்தமற்ற செயல். நமது அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. நமது மாநில எல்லைக்குள் என்ன வரவேண்டும் என்பதை நமது அரசு தான் முடிவெடுக்க வேண்டும். நமது தண்ணீர் உரிமைகளை இழந்த நாம் இன்று நம் சுகாதாரமாய் வாழும் உரிமையையும் இழந்து நிற்கிறோம் என்றே தோன்றுகிறது.
மாற்றங்கள் வரவேண்டும் என்றால் ஒரு அரசியல் புரட்சி கண்டிப்பாக வந்தாகவே வேண்டும் என்ற நிலை இன்று உருவெடுத்துள்ளது. புரட்சி என்றவுடன் ஆளும் வர்க்கம் கோவம் கொள்ளும். கோவத்தை விடுத்து புரட்சிக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்தல் தான் நல்லாட்சிக்கு உதாரணமாக இறுக்க முடியும். மறுத்தால் புரட்சி ஆட்சியாளர்களை புரட்டி போட்டுவிடும் என்பது தான் சரித்திரம் சொல்லும் உண்மை.