திமிர்ப்பிடித்தவனே
நிலை பொறுக்காத மின்னல் போல்
வெட்டி விளையாடினான்
திமிர்ப்பிடித்தவனே
உனக்கு மட்டுமே தெரியும் டா
நான் நாணும் போது
என் கன்னத்தின் நெளிவு சுழிவுகள்
எத்தனை என்று ம்ம்ம்ம்
கெட்டியாகப் பிடித்த
உள்ளங்கை ரேகைகள்
நூலவிழும் உணர்ச்சி
புலப்படவில்லைபோல் ம்ம்ம்ம்
முகம் கழுவாதவனே
களிம்பு குழைகொண்ட
உன் ரோமங்களுக்கே தெரியும்
என் உடம்பில் அவை
கீறி எழும் நரம்புகளின்
சிக்கல் அவிழ்ப்பு சூட்சமங்கள்
அனுசரன்

