தோற்கும் காதல் கவிதைகள் ~ஆதர்ஷ்ஜி

தோற்கும் காதல் கவிதைகள்~ஆதர்ஷ்ஜி
» »»»»»»»»»»»»»»»»»

உணவருந்தும் என் விக்கல்
ஒலி கேட்டுப் பதறி
நீர் கொணரச் செல்லும்
நின் துள்ளோட்ட நடையும்,
கொலுசொலியும்,
நீருடன் நீ பரிமாறும் முகபாவங்களும்,
சொல்லிடும் கவிகளில்
தோற்றுப் போகின்றன
ஓராயிரம் காதல் கவிதைகள்....!

~ஆதர்ஷ்ஜி

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (8-Sep-15, 8:39 am)
சேர்த்தது : ஆதர்ஷ்ஜி
பார்வை : 160

மேலே