சுதிர் கதிர்

யாரய்யா இந்த ரண்டு பையன்களும்?

என்னோட பையங்கள் தாய்யா?

அவுங்க பேரென்ன?

மூத்தவன் சுதிர். சின்னப்பையன் கதிர்.
என்னய்யா மூத்த பையனுக்கு இந்திப் பேரையும் சின்னப் பையனுக்குக் கதிர் -ன்னு தமிழ்ப் பேரையும் வச்சிருக்கே.


என்ன பண்ணறதய்யா. ஊரோட ஒத்து வாழ வேண்டியதா இருக்கே. தமிழர்கள்ல 98% பேர் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேரத்தானே வைக்கறாங்க. அது தான் மூத்தவனுக்கு சுதிர்- ங்கற இந்திப் பேரு. நா தமிழன். என் ஒடம்பிலே தமிழ் ரத்தம் ஓடறதாலே என் மனச்சாட்சி குத்துது. அதனால தான் என் சின்னப் பையனுக்கு கதிர்-ன்னு தமிழ்ப் பேரா வச்சேன்.

பரவாயில்லப்பா உனக்காவது கொஞ்சம் தமிழ்ப் பற்று இருக்கே. ரொம்ப மகிழ்ச்சி. சரி, சுதிர்-ங்கற பேருக்கு என்ன அர்த்தம்?

அதெல்லாம் யாருக்கய்யா தெரியும். எல்லாம் சினிமா தொலைக் காட்சித் தொடர்களப் பாத்து காதுல கேக்கற இந்திப் பேருங்களத் தானே பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. யாரு அந்தப் பேருங்களுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சு பேரு வைக்கறாங்க.

நீ சொல்லறது உண்மைதாய்யா.

---------
சுதிர்= வீரமான, உறுதியான, அறிவுள்ள.

-------++++++++++
சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க

எழுதியவர் : மலர் (9-Sep-15, 7:00 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே