போங்கம்மா

அம்மா. : தரையைப் பெருக்கறமாதிரி...எதுக்கு தழையத் தழைய பொடவக் கட்டனும்....அப்புறம் எதுக்கு தடுக்கித் தடுக்கி விழனும்....?

ராஜாமகள் : போங்கம்மா...!

அம்மா : தட்டைப் பாத்து சாப்பிடேன்....எப்பப் பாத்தாலும் புக்தானா...?

ராஜாமகள் : போங்கம்மா...!

அம்மா : மெதுவா சிரி...அதென்ன சும்மா பல்ல பல்ல காட்டிக்கிட்டு....

ராஜாமகள் : போங்கம்மா.....!

இரண்டு வருடமாக கேட்கிறேனே....

கனவிலாவது வாங்கம்மா.......!

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (10-Sep-15, 12:50 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 235

மேலே