நாய்
சின்ன மழலைபோல்
சிரித்துவரும் பேதையே!!!
சித்திரம் வரையத் தூண்டுகிறது
உன் சின்னஞ்சிறு கைகள்!!
ஓடி விளையாடும் நீ
ஒருநொடி பிரிந்தாலும்
உயிர் பிரிகிறது...
காலை சுற்றும் பாம்பாய்
முப்பொழுதுகளிலும் ஆளை சுற்றுகிறாயே!!!
துப்பறியும் வித்தைகளைக் கற்று
என் துயர் நீக்குகிறாயே!!
விலகாது அன்பு செய்யும் நீ
வெற்றிலையாய் நிற்கும்போது
கற்றுக்கொள்கிறேன் விருந்தோம்பலை......
நீ செய்யும் சேட்டைகளை செந்நிழலாக்குவதிலே சிரம்சாய்த்தது
என் செல்போன்!!!!
மற்றவர் மதிலில் நீ மாக்கோலமிடுவதை
மத்தாப்பூக்கள் என்பேனே!!!
எடுப்பார் கைப்பிள்ளையாய் எனக்கு
சேவை செய்யும் சேவகனே!!!!!
செந்தாழம்பூவிட்டு உனக்கு சிறம்
சாய்க்க பைரவ தெய்வமாகிறாய்!!
முந்நூறுநாட்கள் என்னுள் முத்துக்குளித்த மூத்தமுல்லை நான்உதிரும் காலத்தே முகம் சுளிக்க, மகன்போல் வந்தென் கால்தடம் பற்றும் பாலகனே!!!!
நன்றி மறவா உன்னை
நாயென அழைக்காது நான்பெற்ற பிள்ளையென்பேன்......
என் பிள்ளைபெயர்சூட்டி உன்னை
மகனே என்றழைக்கிறேனே!!!!!!