தமிழ்ப் பிழை நீக்க எளிய வழிகள்
1. "நான் என் மனதில் உள்ளதை தெரிவிக்க வருகிறேன்" ; "என் விருப்பம்" ; "நான் மெத்த படித்தவன்(ள்) அல்ல" ; "வடிகால்" - "பிடிச்சவங்க வாங்க இல்லை - ன்னா போயிடுங்க..." - இப்படிச் சொல்லிக் கொண்டு தவறாக எழுதுவது உங்கள் 'சோம்பலை'யும் , 'அலட்சிய'த்தையுமே காட்டும்..
2. "சுத்தம்" உங்கள் "முகத்துக்கும், உடைக்கும்" - மட்டுமல்ல 'மனதுக்கும்' ,"தமிழுக்கும்" வேண்டும்.!!
அது தானே அழகு.!!
ஒரு "செல்பி" போட எவ்வ்..வளவு மெனக்கெடுகிறீர்கள் ?! உங்கள் தமிழுக்கும் "கொஞ்ஞ்.. ..சம்" மெனக்கெடலாமே...?!
3 . முதலில் "எழுத்துப் பிழை" கண்டு வருந்த வேண்டும். "ஒன்றை எனக்கு தெரியாது" என்று நமக்கு நாமே ஒப்புக் கொண்டால் தான் , அதை நாம் தேடித் தெரிந்து கொள்வோம். முதலில் பிழை (தவிர்க்க) ஒப்புக் கொள்வோம்.
பிழை "தவிர்த்தல்"
***********************
1. எழுதும் போது "அழுத்த்...தமாக" உச்சரித்து, உச்சரித்து எழுதினால் - குறில் ; நெடில் ; ஒற்றுப் பிழை நீங்கும்.
2. "வாசியுங்கள் ..!!" ஆம் சொற்களை, சேர்த்துச் சேர்த்து ; வாசிக்க வாசிக்க " ச்; ற் ; ப் ; ங் ; ய் ; ந் " என்ற ஒற்றுப் பிழைகள் உங்களை கண்டு பயந்தோடும்.
3. "நல்ல தமிழ்", அதாவது சிறந்த கவிதைகள் ; படைப்புகளைப் பார்க்கப் பார்க்க ; படிக்கப் படிக்க உங்கள் சொல்லும் ; எழுத்தும் சிறக்கும்.!! பிழையும் வராது.!!
4 . எழுதிய பின் "ஓரே ஒரு முறை" வாசித்துப் பார்த்து விட்டு பதிவிட்டால் பிழை தவிரும்...
5 . "எழுத்து" சந்தேகம் இருப்பின் முக நூலிலேயே பல்வேறு பதிவுகளைப் பார்த்தும் ; வாசித்தும் தெளிவாகலாம்.
6. முக நூலில் பதிவிட்ட பின்பும் திருத்த முடியும் தெரியுமா..?? உங்கள் பதிவை நீங்கள் மட்டுமே திருத்த முடியும். திருத்துங்கள்.! பிழை நீக்குங்கள்..!!
7 . "தமிழ் - தமிழ்" அல்லது
"தமிழ் - தமிழ் - ஆங்கிலம்" அகராதி (டிக்ஸ்னரி) ஒன்று வாங்கி வைத்து பார்த்துப் பார்த்து பிழை தவிர்க்கலாம்.
" ஆறு மாதத்திற்கு ஒரு முறை "செருப்பு" க்கு செலவு செய்கிறோமே..?!
"ஆயுள் முழுக்க" நம்மோடு வாழும் தமிழுக்கு ஒரு 250 ரூபாய் செலவு செய்யக் கூடாதா..?!" வாங்குங்கள் ; அதுவும் சொத்து தான் ;
அறிவுச் சொத்து.!!
8 . சோற்றில் "கல்" கிடந்தால் கோபம் வருகிறதே...
தமிழில் "பிழை" இருந்தாலும் கோபம் வரட்டும்..! வரும்.!!
ஏனென்றால் ,
"நாங்கள் சூடு ; சொரணை
உள்ள மனித(தமிழ)ர்கள் "
9 . பேசத் தெரிந்த நமக்கு , தமிழ் எழுதுவது எப்படிக் கடினமாகும்.?!
நீங்கள் மனம் வைத்தால்..?!
நீங்கள் உச்சரிக்கும் சத்தத்தைத் தான் எழுத்தாக்கப் போகிறீர்கள்.
இதில் என்ன சிரமம்.. ?!
இது
என் தமிழ் !! ;
உன் தமிழ் !! ; நம் தமிழ் !!
-------------------------------------------------------------
மன்னிக்க..
காயப்படுத்த அல்ல ;
கவசப் படுத்த ; கடமைப் படுவோம்.
"பிழை திருத்தகம்"