ஓட்ஸ்

Oates --ஓட்ஸ்
மேலே படத்தில் பௌலில் இருப்பது ஓட்ஸ் தானியம்
அல்லது விரைகள் .பக்கத்தில் ஓட்ஸ் பயிர் .நம்ம ஊர் கடையில்
பாகெட் டப்பாவில் கிடைக்கிறது .போய் வாங்கி வந்து
விடுங்கள்.சோம்பேறிகள் ஆன் லைனில் ஆர்டர் செய்யலாம்.
இதை வைத்து என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்களா ?
அப்படிக் கேளுங்கள் சொல்கிறேன் .
சூடான ஓட்ஸ் பானம் செய்வது எப்படி என்பதை விளக்கிச்
சொல்கிறேன் .நம்ம ஊர் பாஷையில் சொல்வதானால்
சூடான ஓட்ஸ் கஞ்சி .
பார்த்தீர்களா கஞ்சி என்றால் முகம் சுளிக்கக் கூடாது
கஞ்சி ஆங்கில அகராதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தை.
காஞ்சியை கஞ்சி என்றும் சொல்லுவார்கள் புலவர்கள்.
கஞ்சி வரதப்பா ....எங்கே வரதப்பா ? என்ற ஒரு கதையுண்டு
அந்தக் கதையை பின்னால் சொல்கிறேன்
கவிதை எழுதுகிறவர்கள் கஞ்சி செய்வது எப்படி என்று சொல்ல
வந்தால் இப்படித்தான் சுற்றி சுற்றி விஷயத்திற்கு வரமாட்டார்கள் .
அவசரப் படாதீர்கள் சொல்கிறேன் சொல்கிறேன் .
ஓட்ஸ் கஞ்சி அருந்தினால் ஒட்டகம் போல் நடக்கலாம்
நோய்க்கு மருந்தாகும் ; நோய் வராமலும் தடுக்கும் .
பசிக்கு விருந்தும் ஆகும் .
நாக்கில் நீர் சொட்டுமே ? தெரியும் தெரியும் ...
எப்படிச் செய்வது ?
அடுத்த பகுதியில் பார்க்கலாம்
----அன்புடன் ,சமையல் கவி

எழுதியவர் : சமையல் கவி (19-Sep-15, 9:04 am)
பார்வை : 90

சிறந்த கட்டுரைகள்

மேலே