‎வருமானவரி ஏய்ப்பு எங்கு தொடங்குகிறது,

வரி ஏய்ப்பு எங்கு தொடங்குகிறது, எங்கு இருக்கிறதென எல்லாமே அரசுக்குத் தெரியும்.

பங்குச் சந்தையில் பி-நோட் முதலீடென வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டவர் முதலீட்டில் பாதியும் இங்கிருப்போரின் கருப்புப்பணமே.
NRIபெயரில் பினாமி ஆட்களை வைத்து நடக்கும் மோசடியே. இது அரசுக்கு தெரியாதா?

மொரீஷியஸ்,கெய்மன், தீவுகளிலிருந்து வரும் பணம் அத்தனையும் வரி ஏய்ப்பு பணம்தான்.

பங்குச்சந்தையில் பி-நோட் முதலீடு 2.75லட்சம் கோடி.
கெய்மன் தீவு-31.31%,USA-14.20%
UK-13.49% மொரீஷியஸ்-9.91%
பர்முடா-9.10% என முதலீடு செய்யப் பட்டுள்ளது.

இதில் 80%பணமும் வரிஏய்ப்பு பணம்தான், கருப்புப்பணம்தான் நடவடிக்கை எடுக்கத் தயாரா?

இதில் கெய்மன் தீவில் மக்கள் தொகை
50000 பேர், அங்கிருந்து பங்குசந்தையில் போட்ட முதலீடு 80000 கோடி. அதாவது தலைக்கு 1.75கோடி முதலீடு.

கெய்மன், மொரிஷியஸ் தீவுகளில் முழுவதும் இந்திய முதலாளிகளின் கருப்புப்பணம்தான் இருக்கிறது.

அங்கிருந்து வரும் முதலீட்டுக்கு வரி விலக்கு அளிப்பதால்தான்தானே இந்த மோசடி நடக்கிறது. இனி அங்கிருந்து வரும் பணத்துக்கு வரி விதிக்கப்படுமென அறிவிக்கத் தயாரா?

2வாரம் முன்பு செபி,
34நிறுவனங்கள் 338கோடி நட்டக் கணக்கு காட்டியும்,
25நிறுவனங்கள் 406கோடி லாபக்கணக்கென பொய்யான கணக்கை காட்டியுள்ளதென அறிவித்தது அன்றே பங்குசந்தையில் சரிவை உண்டாக்கி அரசை மிரட்டி தப்பித்தனர். 15லட்சம் அறிவிக்கும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தைரியமுள்ளதா?

பங்குச்சந்தைமூலம் வரும் வருமானத்துக்கு வரிவிதிப்பு என்றதும்
1வாரம் முன்பு 1000புள்ளிகள் சரிவை உண்டாக்கி வரிவிதிப்பு திட்டத்தையே உடைத்தனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

எல்லா அரசியல்வாதிகளும் வருமானத்துக்கு அதிகமாகத்தான் சொத்து வைத்திருக்கிறார்கள்.

கந்துவட்டிகும்பல், பெரும்பண்ணையார்கள் வரிகட்டியதாக சரித்திரமே இல்லை.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

அதெல்லாம் போகட்டும், வரிஏய்ப்பு தவிர மற்ற குற்றமே நடப்பதில்லையா? அதன்மீதான புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

மோடியின் படிப்புச் சான்றிதழ் மோசடியானது - நடவடிக்கை எடுக்கத் தயாரா? ஸ்மிருதி இரானி மீது போலி சர்டிபிகேட் வழக்கு என்ன ஆனது? சதானந்த கவுடா மகன் மீதான வழக்கு,

ராஜ்நாத்சிங் மகன் மீதான வழக்கு, நிதின் கட்கரியின் மீதான புகார்,
வியாபம்ஊழல், பிஜேபியின் தொடர் வரிசையாக வரும் ஊழல்கள் மீது ஒரு நடவடிக்கையாவது எடுக்கப் பட்டுள்ளதா?

வியாபம், 2ஜி, தாதுமணல் கொள்ளை,க்ரானைட் கொள்ளை, கர்நாடக சுரங்க ஊழல், ரிலையன்ஸ்,டாடா மீதான ஊழல்கள்,
இந்தியா முழுவதும் நடக்கும் கனிமவளக் கொள்ளை, etc

இதையெல்லாம் தாண்டும் கார்ப்பரேட்டுகள் அடிக்கும் கொள்ளை.

இதெல்லாம் வருமானவரி ஏய்ப்போடு தொடர்புடையதுதான்.
இதன் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா?

இதற்கு யாருக்கும் 15லட்சம் கொடுக்கத் தேவையில்லை.
இதன் மீது நடவடிக்கையெடுக்க யாருக்காவது தைரியமிருக்கிறதா?

வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தை மீட்போமென சவால் விட்ட மோடி வாயை மூடிக் கொண்டது ஏனோ?

எழுதியவர் : செல்வமணி - இணையம் - Vijayakumar R 7 (23-Sep-15, 10:31 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 138

சிறந்த கட்டுரைகள்

மேலே