சிரஞ்சீவி –ன்னா தலையச் சீவற கொலகாரனா

சிரஞ்சீவி –ன்னா தலையச் சீவற கொலகாரனா?

ஏப்பா அப்பிடி கேக்குற?

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் –ங்கற பழமொழி இருக்கு. சிரசு –ன்னா தலை. சில பேருந்துகளிலே சிரம், கரம் புறம் வெளியே நீட்டாதீர் –ன்னு எழுதி வச்சிருக்காங்க. தலை –ங்கற அர்த்தத்திலெ சிரம் –ங்கற சொல்லைப் பயன்படுத்தறாங்க. அது தான் எனக்குப் புரியல. சிரம் –ன்னா தலை. தலைய ஒரே சீவா சீவிடுவேன் –ன்னு ரவுடிங்க சொல்லறாங்க. தலை சீவ சீப்பு வேணும்-ன்னும் சில எடங்களிலெ சொல்லறாங்க. அது தான் எனக்கு சிரஞ்சீவி –ங்கற பேரோட அர்த்தம் பத்தி பலத்த சந்தேகம்.

டேய் தம்பி ஆந்திராவிலெகூட சிரஞ்சீவி –ன்னு ஒரு நடிகர் இருக்காரு. அந்தப் பேருக்கு நீ நினைக்கிற அர்த்தம் இல்ல. சிரஞ்சீவி –ங்கறது சமஸ்கிருத (வட மொழி)ப் பேரு. அதுக்கு “தீர்க்காயுள்ளோன்” –னு பொருள்.

----------------------------------------------------

வட மொழியில் சிரம் = long time சீரஞ்சீவி = a long lived person,
திருமண அழைப்பிதழ்களில் மாப்பிள்ளையின் பெயருக்கு முன்பு ’செல்வன்’ - ற சொல்லைப் பெரும்பாலான தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள். . சிலர் மணமகன், மணமகள் பெயருக்கு முன்பு ‘சிரஞ்சீவி’ -ன்ற வட மொழிச் சொல்லையும் ‘செல்வி’ -ன்றதுக்கு பதிலா ‘சௌபாக்கியவதி’ -ன்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள்.
-------
சிரிக்க அல்ல. பிற மொழிச் சொல்லின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (25-Sep-15, 9:15 pm)
பார்வை : 292

சிறந்த நகைச்சுவைகள்

மேலே