ஸ்ரீ குருநாதர் பள்ளியெழுச்சி
“ஆவினம்" அழைத்தது அம்மா! அம்மா!என்று
ஆதவன் எழுந்தனன் செந்நிறப் பந்து போல்,
புல்லினம் கூவின, பொழுதும் புலர்ந்தது
புரு சொத்தமனே!! பள்ளியெழுந்தருளே!!!.....
செந்தாமரை மலரும் நின் எழில் முகம் காண
சன்னிதி வாசல் தேடி மாந்தர் எல்லாம் வந்தார் ,
பூபாளம் பாடும் பக்தர் மங்கையர் குரலிசையில்
சற்குருநாதா!! பள்ளியெழுந்தருளே!!!....
மதிவதனம் கண்டால் மனக் கவலை தீரும்
அருள் நயனங்கள் பார்வை ஆரவணைக்கும் எம்மை,
எப்பிறவி தீவினையும் ஓடும் உன் தரிசனத்தால்
எம் குருநாதா!! பள்ளியெழுந்தருளே!!!.....
மாதுரிஸகி மயங்கும் ப்ரேமிகவரதானும் நீ ,
ஆயர்குலம் காக்கும் "பால முரளிதரன்" நீ ,
பார்த்தனுக்குச் சொன்ன கீதை எங்களுக்கும் அருள வந்தாய் !
பாற்கடல் ஸயணம் போதும் பள்ளியெழுந்தருளே!!!.....
புரு ஷோத்தமனே!! பள்ளியெழுந்தருளே!!!.....
எம் குருநாதா!! பள்ளியெழுந்தருளே!!!.....
சற்குருநாதா!! பள்ளியெழுந்தருளே!!!....

