ஜோஹாரி விண்டோ

”என்னை யாருக்கும் புரியல்லை” என்று சொல்லி பிற்சேர்க்கையாக “முஸ்க்.. முஸ்க்” என்று இரண்டு விக்கல்களை எஃபெக்டாகத் தருகிறவர்களை நீங்கள் சந்தித்திருக்கலாம்.

வேறு சிலர் முஸ்க் முஸ்க்குக்கு பதிலாக “யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்” என்று தான் நீங்கலான சமூகத்தை ஒரு சாத்து சாத்துவார்கள். இவர்களுக்கு எப்படி ரெஸ்பான்ஸ் செய்கிறோம்?

குழந்தையை சமாதானம் பண்ணுவது போல சமாதானம் பண்ணுகிறோம், அல்லது ’உன்னைப் புரியாத நூறு பேரைப் பத்திக் கவலைப்பட்டு நேரத்தை வீணாக்காதே, புரிஞ்ச ரெண்டு பேரோட சந்தோஷமா இரு’ என்பது மாதிரி பிரசங்கம் செய்கிறோம். யாராவது ஒரு சான்ஸ் கொடுத்து விட்டால் தீர்ப்புக்கு முன் சாலமன் பாப்பையா வழங்கும் முடிவுரை போலப் பிரசங்கம் செய்யும் பசி நம் எல்லாரிடமும் இருக்கிறது.

ஜோஹாரி விண்டோ என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. இரண்டு பேர்களுக்கு இடையிலான உறவு வலுவாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது அதைப் பார்த்தால் புரியும். எனக்கும் இன்னொருத்தருக்கும் இருக்கும் உறவில் கீழ்காணும் நான்கு வகையான விஷயங்கள் உள்ளன.

1. இருவருக்கும் தெரிந்தவை
2. என்னைப் பற்றி நான் அறியாமல் அவர் அறிந்தவை
3. என்னைப் பற்றி நான் வெளியிடாமல் மறைத்தவை
4. என்னைப் பற்றி நானும் அறியாமல் அவரும் அறியாமல் இருப்பவை

இந்த நாலு கேட்டகிரிக்கு பதில், எல்லாமே முதல் ரகத்தில் விழுமானால் உறவு வலுவாக இருக்கும்.

என்னை யாருமே புரிஞ்சிக்கல்லை கமா முஸ்க் முஸ்க் மக்களின் செய்திகள் எல்லாமே இரண்டு, மூன்று, நான்கு ரகமாக மாத்திரமோ அல்லது முதல் ரகத்தில் ரொம்ப சொற்ப விஷயங்களோதான் இருக்கும்.

இது குறித்துப் பேச நிறைய உண்டு. இன்னொரு சமயம் பேசுவோம். இப்போது சுருக்கமாக,

என்னை யாருக்கும் புரியல்லை மக்களின் பிரச்சினை அவர் யாரையும் புரிந்து கொள்ள முயல்வதில்லை என்பதே. இரண்டு பேருக்கு இடையில் புரியாமை நிலவுமானால் யாருக்கு யாரைப் புரியாவிட்டாலும் அதன் Effect ஒன்றாகவே இருக்கும். ஆனால் யாரைக் கேட்டாலும் அவனுக்குத்தான் என்னைப் புரியல்லை என்பார்கள்.

அவனுக்குப் புரியாவிட்டாலும் புரிய வைக்கும் Responsibility தனது என்பதை மறந்து விடுகிறார்கள்!

எழுதியவர் : செல்வமணி (27-Sep-15, 12:18 am)
பார்வை : 144

சிறந்த கட்டுரைகள்

மேலே