உன் மனதைப் பிடிக்க வந்தேன்

திரும்பவும்
திரும்பினாய்
நான்
திரும்பிய பொழுது

திருத்தமாய்
முறைக்கிறாய்
நான்
விரும்பிய பொழுது

வருத்தங்கள்
உண்டெனில்
உடனே
சொல்லிடு

பொருத்தமாய்
பாசொல்லி
அதைநான்
அணைத்திட‌

கருத்துள்ள‌
பெண்ணேநீ
எனைஎன்று
புரிந்து கொள்வாய்?

மறுப்புகள்
மறந்துவிட்டு
எனைநன்று
அறிந்து கொள்வாய்..

சின்னவிழி
அசைவைப்பார்த்து
எனக்குபல‌
நாளாச்சு

சிணுங்கலுடன்
சிரிப்பைப்பார்த்து
பலபௌர்ணமி
கடந்தாச்சு

விண்மீனாய்
வெகுதூரத்தில்
எனைவிட்டுஏனோ
போயிருக்க‌

உன்மனதை
பிடிக்கவந்தவன்
எனைமுழுதாய்
தொலைத்திருக்கேன்

தடங்கலுக்குநீ
வருந்துவாய்என‌
தாகத்துடன்நான்
பொருத்திருக்கேன்...

காதல்தண்ணீர்
மட்டும்தருவாய்
கண்ணீர்அணை
திறக்க அனுமதியாய்....!!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 7:10 am)
பார்வை : 628

மேலே