எல்லாம் சுத்த சோம்பேறிகள்

முல்லாவுக்கு ஒரு பலசரக்குக் கடையில் வேலை கிடைத்தது.சரக்கு அறையிலிருந்து மூட்டைகளைத் தூக்கி வந்து லாரியில் ஏற்ற வேண்டியது அவர் வேலை.அவர் அதே வேலை பார்க்கும் மற்றவர்களைப் பார்த்தார். அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூடைகளைத் தூக்கி சென்றனர்.முல்லா முயன்று பார்த்தார்.

அவரால் இரண்டு மூடைகளை ஒரே நேரத்தில் தூக்க முடியவில்லை.அதனால் ஒவ்வொரு மூடையாகத் தூக்கிச் சென்று ஏற்றினார்.அவரைக்கவனித்தமுதலாளி,''முல்லா,நீ மட்டும் ஏன் ஒவ்வொரு மூடையாகத் தூக்குகிறாய்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார், ''முதலாளி, அவர்கள் எல்லாம் சுத்த சோம்பேறிகள்.இரண்டு மூடை தூக்க இரண்டு தடவை இங்கும் அங்கும் நடக்க வேண்டும் என்று பயந்து இரண்டிரண்டு மூடைகளாகத் தூக்குகிறார்கள்.''

எழுதியவர் : முல்லா கதை (29-Sep-15, 6:34 pm)
சேர்த்தது : அகர தமிழன்
பார்வை : 51

சிறந்த நகைச்சுவைகள்

மேலே