கர்ப்பம்
![](https://eluthu.com/images/loading.gif)
கீறப்பட்ட மேனி
விதைகள் உள் வாங்கவே
தீண்டப்பட்ட மேனி
மரமாய் வேர் பிடிக்கவே
தோண்டப் பட்ட இடங்கள்
கிணற்று நீருக்காகவே
என அனைத்தையும்
பொறுத்துக் கொண்டவள்
அளவுக்கு மீறிவிட்டிருக்கும்
அஸ்திவாரக் காயங்களால்
தாக்குண்டு அடிக்கடி
நடுங்கிச் சாகிறாள்.