கவிஞர் கண்ணதாசன் - படைப்பு குகன் வருடம் 2009

எழுத்தாளனுக்கு இருக்கும்
வறுமை சாபத்தை போக்கிய
முதல் கவிஞன் !
தன் பழக்கத்தால்
வறுமை கோட்டை தொட்ட
சராசரி மனிதன் !

படித்த படிப்பு
இவர் கவிதைக்கு தடைப்போடவில்லை
படிக்கும் கவிஞர்களுக்கு
புத்தகமாக இருந்தவர் !

நாத்திகனாய் தொடங்கி
ஆத்திகனாய் வாழ்ந்தவர் !
காதலை அனுபவித்து
அதை தூற்றவும் செய்தவர் !

பாட தெரியாதவர்களையும் பாட வைத்தவர் !
பாட்டாலே தனக்கு மரணமில்லை
என்று கர்வமாக கூறியவர் !
தன் ஒவ்வொரு பாடலிலும்
உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர் !

எல்லா தரப்பு மனிதனாக வாழ்ந்து காட்டியவர் !
தான் வாழ்ந்த மனநிலையை
தன் எழுத்துக்களால் உணர்வை பதிவு செய்தவர் !

இவர் போல் வாழ்க்கையை ரசித்தவர் யாருமில்லை
இவர் போல் வாழ்க்கையில் இழந்தவரும் யாருமில்லை !

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Oct-15, 10:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 133

மேலே