புல்லெட் வண்டி

பண்ணையார் ஓட்டிய காலத்தில்
உன் டுபு டுபு சப்தத்தின் பின்சென்ற
என் கால்கள் உன் மேல்
பயணம் செய்யும் வரை ஓயவில்லை.....
எங்கோ உன் பயணத்தை நீ
தொடங்கிய உடன் ஊரே அறியும்
பண்ணையாரின் பயணம் தொடங்கியதை...
காலமாற்றத்தில் மனித சப்தத்தில்
உன்னை மறந்தாலும் எங்கோ ஒரு
நிசப்தத்தில் உன் ஒலி எனை
எழுப்பிக்கொண்டே இருக்கிறது....
பெயர் மாற்றத்தில் ராயல் enfield ஆக
என் கை சேர்வாய் என அன்று நான் அறியேன்...
என் கனவை துவக்கிவைத்த என்
டுபு டுபு புல்லெட் வண்டியே இனி
என் பயணம் உன்னுடனே........