அடையாளம்

இளமையும் முதுமையும்
வயதில் அல்ல....
என்று மாணவரை
தேடிய வியூகத்தின்
வித்தகர்.....

வாழ்க்கையில்
போராட்டங்கள் கடந்து
வெற்றிச்சிகரம்
தொட்ட மாமனிதர்....

நீங்கள்
எளிமையின் எழில்....
அறிவியலின் அரிச்சுவடி...
இளைஞனின் ஏணிப்படி....
லட்சியத்தின் பெட்டகம்.....
சரித்திரம் படைத்த சாதனை மனிதன்..

தமிழகமே உன்னை
அடையாளம் கொண்டு
பெருமை அடைந்தது......

எழுதியவர் : (11-Oct-15, 4:11 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 75

மேலே