பிரிந்து சென்றுவிடு என்னைவிட்டு...

நட்புக்கும்
காதலுக்குமான
இடைவெளியின் தூரத்தை
குறைத்தவன் நீ...

முன்பெல்லாம்
பார்வையாலே
பல கதைகள்
பேசும் நீ,
இப்போதெல்லாம்
பாராமுகம்
காட்டுகிறாய்...

என்னோடு
இருக்கும் வேளைகளில்
எதை பற்றியாவது
ஓயாமல்
பேசிக்கொண்டிருக்கும் நீ
இப்போதெல்லாம்
மௌன விரதம்
இருக்கிறாய்...

நான் கேட்பதற்கு
மட்டும்
சிக்கனமாய் பதில்
வருகிறது.
உன்னிடமிருந்தல்ல.
உன் உதடுகளில் இருந்து...

என்னை
பிடிக்காமல் தான்
இத்தனை தூரம்
சேர்ந்து வந்தாயா
என்னோடு...?

பிரிந்து சென்றுவிடு
என்னை விட்டு
பிடிக்கவில்லை என்றால்.
உன் நினைவுகளின்
துணையோடு நான்
வாழ்ந்திடுவேன்.
காலம் முழுதும்...

எழுதியவர் : சக்திநிலா (2-Jun-11, 4:56 pm)
சேர்த்தது : Sakthi Nila
பார்வை : 383

சிறந்த கவிதைகள்

மேலே