மறைக்கவோ ,மறுக்கவோ மறக்கவோ முடியா நினைவு நாள்

இயற்கையின் இடப்பெயர்வால்
இடமில்லா வாழ்வும்
செயற்கையின் இடி முழக்கத்தாலும்
சிதறுண்டு கம்பிக்கூண்டுக்குள்
எங்கள் இச்சை வாழ்வு
இயற்கையின் பரிசால்
இனிய வாழ்வும்
செல்வ செழிப்பும்
செங்கோண்மை
தவறாதா செல்வ மகனின்
பார்வையில் பவனி வந்த
எம் தேசம்
பாழடைந்து கிடக்கிறது
கை கூப்பி வணங்கிடவே
காத்து வந்த கடவுளும்
கண்ணை இறுகமூடி
கவலையின்றி
கல்லைபோலானர்
எங்கள் முகம்
புன்னகை மலர்ந்தது
நினைவுகள் இல்லை
பசியாற உண்டதும்
ஞாபகத்துக்கில்லை
அழுவதற்கு கண்ணீர் கூட
மிச்சமில்லை
எத்தனை சடலங்களை
எங்கு எங்கு புதைத்தோம்
அத்தனை பேருக்கும்
எத்தனை தடவைகள்
அழுது புரள்வதென்று
ஏங்கி இருந்தோம்
முதியோர் இளையோர்
பச்சிளங்குழந்தைகள்
பகுத்தறிவற்ற உயிரினங்களை
பதம் பார்த்த
பஞ்சமா பாதகர்களின்
பல்குழல்பீரங்கிகளினால்
கொன்று குவித்த
கொலை வடிவங்கள் தான் எத்தனை
இனத்தின் இரத்தக்கலறியுமாக
உடல் சிதைவுப்பிணங்களும்
கொடிய அட்டூழியங்களை
சுமந்த படியும்
நரியின் ஊளை சப்தமும்
வெடிமருந்து நாற்றமும்
வேதனைக் காலத்தை
வேடிக்கை பார்த்திருந்த
நேரம் போதவில்லை அகிலத்துக்கு
இலட்சக் கணக்கான
இன உயிர் விழ்ந்துங்கூட
மூடிகொண்ட
முகமூடிகள் அகலவில்லை
முள்ளி வாய்க்களில்
முற்றுப் புள்ளிக்குள்
முடங்கிப்போன
எங்கள் இனத்தின்
மரணக்குரல் என்றும்
எங்கள் மனங்களில்
எதிர் ஒலித்துகொண்டேயிருக்கும்
உலகத்தின் பார்வையில்
முதலைக்கண்ணீர் கசிந்தாலும்
அன்று வாழ்ந்த அரவணைப்பும்
இன்று இழந்து
தவிக்கும் தவிப்பையும்
மானத்திற்காய் மடிந்த
மகா வீரர்களும்
சொந்த பந்தங்களையும்
இனியொரு நிவாரணமும்
நிவர்த்தி செய்யப்போவதில்லை
காலங்கள் எத்தனை
கடந்து சென்றாலும்
மறைக்கவோ ,மறுக்கவோ
மறக்கவோ முடியாதா
நினைவுகளைத்தான்
வைகாசி பதினெட்டில்
வைத்து விட்டுப் போன
மானத்தமிழர்களின் தியாங்கள்
எங்கள் வரலாற்றுச்சுவடுகளில்
பொறிக்கப்படட்டும்
தமிழிழ பாரதக் கதையாய்
திரி தசாப்த கால
தேசியத் தலைவனின்
யுத்த வேள்வியையும்
சிங்கள அரக்கர்களின்
துரோக சூழ்ச்சிகளையும்
எமது ஈழம்
சூறையாடப்பட்ட சதிகளையும்
இனி வரும் தலைமுறைக்கும்
கற்றுக்கொடுப்போம் ............

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (12-Oct-15, 7:10 pm)
பார்வை : 165

மேலே